Thalapathy 65 Title Issue
Thalapathy 65 Title Issue

தளபதி விஜயின் 65 படத்திற்கு டைட்டில் கொடுக்க மறுத்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

Thalapathy 65 Title Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உள்ள விஜய் 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் துப்பாக்கி படத்தை தயாரிப்பவர் கலைப்புலி எஸ் தாணு துப்பாக்கி-2 டைட்டிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது. நடிகர் விஜயிடம் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெற்றிமாறன் உங்களை சந்தித்து கதை கூறுவார் என கூறியுள்ளார்.

கர்நாடகவின் புதிய அணைக்கு தடை விதிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

மேலும் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் முடிந்து நம்முடைய படத்தை துவங்கலாம் என கூறியுள்ளனர். அதற்குள் விஜய் முருகதாஸ் உடன கூட்டணி அமைத்து விட்டதால் இவர்கள் இருவருக்கும் இடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கலைப்புலி எஸ் தாணுவின் துப்பாக்கி-2 என்ற தலைப்பை விஜய்யின் புதிய படத்திற்கு கொடுக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது துப்பாக்கி 2 படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படியான தகவல் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக இது வெறும் வதந்தியாக இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.