Thalapathy 65 Movie Update
Thalapathy 65 Movie Update

விஜய் 65 படம் பற்றி மாஸான அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

Thalapathy 65 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

thalapathy 65
thalapathy 65

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்த படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தளபதி 65 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக அதில் ஒரு வேடம் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே படத்தில் விஜய்யின் வில்லன் மற்றும் ஹீரோவாக நடிக்க இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.