Vijay 65
தளபதி 65 படத்திற்காக 10 இயக்குனர்கள் கதை கூறி இருந்த நிலையில் அவர்களில் இருவருக்கு விஜய் டிக் அடித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது, ஆனாலும் அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும் இப்படத்திற்காக பேரரசு, சமுத்திரக்கனி, முருகதாஸ், மகிழ்திருமேனி, கோமாளி பட இயக்குனர் பிரதீப் என கிட்டத்தட்ட 10 இயக்குனர்கள் கதை கூறியுள்ளனர்.

இவர்களில் தற்போது விஜய் பேரரசு மற்றும் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு டிக் அடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் ஒருவருக்கு தான் தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க போவதாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் யாராக இருந்தால் நல்லா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க பாஸ்??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.