Thalapathy 64 tentatively titled as Irumbukai Mayavi | Vijay | Lokesh Kanagaraj | Kollywood | Tamil Cinema | Vijay fans | Thalapathy 63

Thalapathy 64 tentatively titled as Irumbukai Mayavi :

தளபதி 64 படம் பாகுபலி பாணியில் ஒரு சூப்பர் ஹீரோ கதையைக் கொண்ட படமாம். இப்படத்திற்கு தற்காலிகமாக இரும்புக் கை மாயாவி என பெயர் வைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ் – ஏன் தெரியுமா?

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை யார் இயக்குவார் என மிகப்பெரிய கேள்வி நிலவிவரும் நிலையில் இப்படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கபோவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படம் பாகுபலி பாணியில் ஒரு சூப்பர் ஹீரோ கதையைக் கொண்ட படமாம்.

மேலும் இப்படத்திற்கு தற்காலிகமாக இரும்புக் கை மாயாவி என பெயர் வைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.