Raghava Lawrence Thanks For fans | The third part came to the screen recently.| Kanchana 3 | Vedhika | oviyaa | Kovai Sarala

Raghava Lawrence Thanks For fans :

காஞ்சனா 3 படம் திரையரங்குகளில் தனது 25-வது நாளை எட்டியது. இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு டிவிட்டரில் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

தளபதி 64 படத்துக்காக இளம் இயக்குநருடன் இணையும் விஜய் – யாருமே எதிர்பார்க்காத கூட்டணி!

இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் சொல்லியிருந்தோம். இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது ஒருபக்கம் இருக்க நேற்று இப்படம் திரையரங்குகளில் தனது 25-வது நாளை எட்டியது. இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு டிவிட்டரில் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் காஞ்சனா 2-விற்குப் பின் இரண்டாவது முறையாக லாரன்ஸ் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதைதொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தற்போது லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.