Vijay 64 | Vijay 64 Shooting Spot Photos
தளபதி விஜய் பக்காவான லுக்கில் இருக்கும் தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 என்ற பெயரிப்படாத திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மேலும் அடிக்கடி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்கள் லீக்காகியுள்ளன. தளபதி விஜய் பேராசிரியராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது லீக்காகியுள்ள புகைப்படங்களில் விஜய் செம ஸ்மார்ட்டாக இருப்பதால் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.