தளபதி விஜய் அவர்களின் ரீசன்ட் வீடியோ கிளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், பாபுஆண்டனி உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படகுழு தெரிவித்திருந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வரும் நடிகர் விஜய் அதற்கு முன்பாக ரீசண்டா விமான நிலையத்திற்கு சென்றிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
அதன்படி, லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் விஜய் தற்போது சிறிய ஓய்விற்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதற்காக நேற்றைய தினம் விமான நிலையத்திற்கு வந்திருந்த விஜயின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.