நடிகர் விஜய் ரசிகர்களை அழைத்து பாராட்டிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மேலாக “விலையில்லா விருந்தகம்” நடத்தும் 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

அதன் பிறகு, சுமார் 2 மணி நேரம் ரசிகர்களிடம் உரையாடிய விஜய், இந்த உதவிகளை தொடர்ந்து செய்யுமாறும் மேலும் பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள் உதவி செய்கிறேன் என்று அவர்களிடம் உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திட்டமிட இருப்பதாகவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.