இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் அதிக பின்தொடர்பாளர்களைப் பெற்ற சாதனையை விஜய் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது காஷ்மீரில் நிறைவடைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக சென்னையில் நடக்க இருக்கும் நிலையில் தளபதி விஜய் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்த சில நொடிகளிலேயே பல லட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் விஜயின் அக்கவுண்டில் 5 மில்லியனுக்கு மேல் பின்தொடர்பாளர்கள் இணைந்து இருக்கின்றனர். இதன் மூலம் ஒரே நாளில் அதிக பின் தொடர்பாளர்களை பெற்ற பெருமையை தளபதி விஜய் பெற்றுள்ளார். இவரது இந்த புதிய சாதனையை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.