தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளில் நிறைவு செய்த தளபதி விஜய்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரபு, நடிகர் ஷாம், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி விஜய்!!… பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் குவியும் வாழ்த்து.!

தில் ராஜு தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் அண்மையில் வெளியான ரஞ்சிதமே பாடலின் வரவேற்பை தொடர்ந்து நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் பாடலான “தீ தளபதி” பாடலும் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

30 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி விஜய்!!… பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் குவியும் வாழ்த்து.!

இந்நிலையில் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தளபதி விஜய்க்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.