தளபதி 68 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலம் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்து வரும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருப்பதை படக்குழு டைட்டில் ப்ரோமோவுடன் அறிவித்திருந்தது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்க இருக்கும் “தளபதி 68” திரைப்படம் குறித்த அப்டேட் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.

அதன்படி சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கம் இருப்பதாகவும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இது குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இப்படத்தை அடுத்த தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது.