Thalapathi 63 : தளபதி 63 படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அஜித், விஜய் கூட வேணா, இவரோட முத்த காட்சியில் நடிக்க தயார் – தமன்னா.!
AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு, ஆனந்த ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து பிரபல நடிகரான சௌந்தர் ராஜாவாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
விஜய் சேதுபதியின் தர்மதுரை, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் சௌந்தர் ராஜா வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to be a small part but meaningful role in #Vijay63 after #Theri. Thanks to @Atlee_dir brother????. No words to express my happiness working with @actorvijay anna combinations today ????????. pic.twitter.com/7gWbCTe0bF
— Soundara Raja Actor (@soundar4uall) March 2, 2019