ரஜினியின் தலைவர் 171 திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து வந்த ரஜினி சமீபத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து TJ ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் தன்னுடைய 170வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான முதல் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே சலசலப்பாக பேசப்பட்டு வரும் தலைவர் 171 திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த தகவல் ஏறக்குறைய உறுதியாகி இருப்பதாகவும் ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் பணிகளை லோகேஷ் கனகராஜ் தனது நண்பரும் பிரபல இயக்குனருமான ரத்னகுமாருடன் இணைந்து ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.