ரஜினியின் தலைவர் 170 திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தொடர்பான போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படகுழு தீவிரம் காட்டி வரும் நிலையில் லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்ததாக நடிக்க இருக்கும் தலைவர் 170 திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 170 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாபச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் விக்ரம், அர்ஜூன் ஆகியோரிடம் இப்படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி சமீபத்தில் வைரலானது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் 170-வது படத்தில் தெலுங்கு திரை உலகின் பிரபல முன்னணி நடிகர் நானி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் இவரின் காட்சிகள் 20 நிமிடம் திரையில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்களால் ஜெயிலர் படம் போல் இப்படத்திலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.