தலைநகரம் 2 படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் சுந்தர் சி. இவருடைய நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று தலைநகரம்.

பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. வி இசட் துரை இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சுந்தர் சி யுடன் இணைந்து பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் படு மிரட்டலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video