Thala Fans Request to Ajith

நீங்க ரொம்ப மோசம் முதலில் உங்கள் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவை மாற்றுங்கள் என தல அஜித்திற்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Thala Fans Request to Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தல அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படம் பற்றி ஒரே ஒரு அப்டேட் ஆவது வெளியாகாத என கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு இதுநாள் வரை எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்கள் போனி கபூர் மற்றும் சுரேஷ் சந்திரா ஆகியோரை விமர்சனம் செய்து பதிவுகளை பதிவிட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ட்விட்டர் பக்கத்தில் #ThalaChangeYourPRO என்ற ஹாஸ்டேக் டிரெண்ட்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

போனி கபூர் நீங்க ரொம்ப மோசம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். உங்களிடமிருந்து ஒரு அப்டேட் காக்க ஒன்றரை வருஷமாவா காத்திருப்போம்?? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/Vishalr03260980/status/1342071456415375361?s=19
https://twitter.com/rockylocky3456/status/1342065335143288833?s=19
https://twitter.com/rockylocky3456/status/1342064915255685120?s=19
https://twitter.com/ThalaFC33/status/1342064750012682243?s=19