Thala Fans Poster for Ajith Request

தல அஜித்தின் வார்த்தைக்கு கட்டுப்படுவதாக தல ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Thala Fans Poster for Ajith Request : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.

அதனால் ரசிகர்கள் பொது இடங்களில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு முழக்கமிட்டு வந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தல அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கண்ணியத்துடன் கட்டுப்பாட்டுடனும் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தல அஜித் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரசிகர்கள் “உங்கள் வார்த்தைக்குக் கட்டு படுகிறோம்” என்ற போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.