Thala Fans Celebration

Thala Fans Celebration : விஸ்வாசம் அப்டேட் ஏதும் வெளியாகவில்லை என்றாலும் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி மாஸாக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இறுதியாக வெளியான அடிச்சு தூக்கு சிங்கிள் டிராக்கை தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இன்று தல ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தினம்.

ஆம், விசியம் என்னவென்றால் இன்றோடு விஷ்ணு வரதன் இயக்கத்தில் தல அஜித்தின் ஸ்டைலிஷான லுக்கில் பில்லா படம் வெளியாகி 11 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

இதனை தற்போது தல ரசிகர்கள் #11YrsOfSovereignBILLA என்ற ஹேஸ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் பலரும் விஷ்ணு வரதன், அஜித் கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமென ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.