Thala Birthday Special

Thala Birthday Special : 

ஆசை, காதல் கோட்டை என கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிய அஜித்துக்கு அடுத்த கட்ட பாய்ச்சலை கொடுத்த படம் காதல் மன்னன். சவால் விடுவது..

அதில் வெற்றி பெறுவது என காதல் மன்னனில் அஜித்தின் கதாபாத்திரம் அவரது ரியல் லைஃபுடன் நிறையவே பொருந்தி போனது.

இந்த படத்தின் மூலம் ஜெமினி கனேசன், கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவின் புதிய காதல் மன்னனாக அஜித் உருவெடுத்தார்.

குறிப்பாக அஜித்துக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகத் தொடங்கிய காலக்கட்டம் அது.

”அஜித் போல மாப்பிள்ளை வேண்டும்” என்கிற பேச்சும் வழக்கத்துக்கு வந்தது இந்த படத்தால்தான்.

இதன் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சரண் கூட்டணி அமர்க்களம், அட்டகாசம் என அடுத்தடுத்து பல படங்களில் இணைந்தனர்.

இந்நிலையில் இன்று அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக சரண் தனது புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஆரவ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு மார்கெட் ராஜா என பெயரிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.