தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களும் மாறி மாறி டட்ரெண்ட் செய்து ட்விட்டரில் ஒரே கொண்டாட்டமாக இருந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவரது ரசிகர்கள் எப்போதும் சமூக வளையதளங்களில் எலியும் பூனையுமாக இருந்து வருபவர்கள் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.

தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் #27YrsOKwEmperorVIJAY என்ற ஹேஸ்டேக்கில் விஜயின் 27 வருட திரையுலக பயணத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாக தல அஜித் ரசிகர்கள் #மக்கள்தலைவன்அஜித், #Viswasam, #Valimai என பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி அவர்களும் ஒரு பக்கம் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர்.

இதனால் இந்த ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.