Thala Ajith Record
பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரஜினி, விஜயை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார் தல அஜித்.

Thala Ajith Record : தற்போது தமிழ் சினிமாவில் அனைத்து விதமான படங்களும் தயாரித்து வெளியிடப்படுகின்றது.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தொழில் நுட்பம் முறையில் மற்றும் கமர்சியல் ரீதியில் வெளிவரும் படங்கள் என ரசிகர்கள் நல்ல படங்களை வரவேற்பதில் தயக்கம் காட்டுவது இல்லை.

அந்த வகையில் யார் ஆதரவும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தல அஜித்.

அஜித் என்றால் தமிழ் நாட்டில் ஒரு கூட்டமே கிளம்பும். அதற்கு தல நடிப்பு மட்டும் காரணம் இல்லை. அவரின் தனி வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.

பிக் பாஸின் அடுத்த வைல் கார்ட் என்ட்ரி இவர் தான் – அதிர்ச்சியாக்கிய விஜய் டிவி அறிவிப்பு.!

சினிமாவை ஒரு தொழிலாக மட்டும் பார்க்கும் சில நடிகர்களுக்கு இடையில் இவர் நடித்து வெளியாகும் படங்களை ரசிகர்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள் என்று தெரிந்து கதை தேர்வு செய்வதில் மிகவும் தெளிவாகவும் கருத்து உள்ள படங்களில் நடித்தும் வருகிறார் தல அஜித்.

சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் வாங்கிய அனைத்து திரையரங்குகளும் லாபம் பார்த்து

உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இந்த வருடத்தில் பாக்ஸ் ஆஃபீஸில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள நடிகர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

தல அஜித் தற்போது தமிழ் பாக்ஸ் ஆஃபீஸில் நம்பர் 1 இடத்தை பிடித்து உள்ளார். விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களின் வசூல் ரூ. 200 கோடியை கொடுத்து உள்ளதால் தல அஜித் நம்பர்-1 இடத்தில் உள்ளார்.

அடுத்த இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் தளபதி நடித்து வெளியான மெர்சல், பைரவா படங்கள் ரூ. 185 கோடி வசூலித்து இருந்தது, அதனால் தளபதி 2-ஆம் இடத்தில் உள்ளார்.

அடுத்த மூன்றாம் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார் அவர் நடிப்பில் வெளியான 2.0 மற்றும் காலா படங்களின் வசூல் ரூ.180 கோடி என்பதால் அவருக்கு இந்த வருடம் பாக்ஸ் ஆஃபீஸில் மூன்றாம் இடம் பிடித்து உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.