Thala Ajith Latest Photos from Valimai

தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக அவரது கையில் காயம் ஏற்பட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Thala Ajith Latest Photos from Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித் ரசிகர் ஒருவர் உடன் என்று பேசிக்கொண்டே இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்தப் புகைப்படத்தில் தல அஜித்தின் இடப்பக்க கையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தல அஜித்திற்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏம்பா வினோத்தே தலக்கு ரிஸ்க்கான காட்சிகள் வேண்டாம். எங்களுக்கு அவரை திரையில் பார்த்தாலே போதும் என்று சொன்னோம். அப்பறம் ஏன் இப்படி அடி படும் அளவுக்கு ரிஸ்க்கான காட்சிகள் வைத்தாய் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.