Thala Ajith in Green India Challenge
Thala Ajith in Green India Challenge

பல வருடங்களுக்கு முன்பே கிரீன் இந்தியா சேலஞ்சை தல அஜித் முடித்து இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

Thala Ajith in Green India Challenge : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டுமென கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை மேற்கொண்டார்.

அதாவது தன்னுடைய வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு நடிகர் விஜய் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கும் இதேபோன்று மரக்கன்று நடுமாறு சவால் விடுத்திருந்தார்.

மூன்றாவது முறையாக இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழகம் – வெளியான முக்கிய தகவல்கள்

நேற்று மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய்யும் மரக்கன்று ஒன்றை நட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல ரசிகர்கள், அஜித் பல வருடங்களுக்கு முன்பாகவே இதேபோன்று மரக்கன்றுகளை நட்டு உள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

https://twitter.com/John_Wick_Off/status/1293220396884348932?s=19