நடிகர் அஜித் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக துணிவு என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை முடித்த அஜித் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் பரவத் தொடங்கியுள்ளது.

அஜித்தின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் 64வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் அஜித்தின் 63 வது படத்தை அட்லி, சிறுத்தை சிவா, ஏ ஆர் முருகதாஸ் அல்லது தெலுங்கு இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோரில் ஒருவர் இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.