Thala 61 Production Company
Thala 61 Production Company

தல அஜித்தின் அடுத்த படத்திற்காக இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala 61 Production Company : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில், யாருடைய தயாரிப்பில் நடிப்பார் என்பதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், தல 61 படத்தை போனி கபூர் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க போட்டி போட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்களில் அஜித் யாருக்கு கால்ஷீட் கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.