Thala 60

Thala 60 Music : பிரபல இசையமைப்பாளருக்கு தல அஜித் வாக்கு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த தகவலை புகைப்படத்துடன் சம்மந்தப்பட்டவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முண்ணனி நடிகரான தல அஜித் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தல அஜித்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் நேரில் சந்தித்துள்ளார். சந்தித்தது மட்டுமில்லாமல் அஜித்துடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் நாம இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம் என கூறியதாக அந்த டீவீட்டில் கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அப்போ அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.