Thala 59 Release Date

Thala 59 Release Date : தல 59 படத்தின் ரிலீஸ் தேதியை யுவன் ஷங்கர் ராஜா உறுதி செய்துள்ளார். இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தல அஜித் விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிங்க் படத்தில் நடிக்க உள்ளார்.

ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இவர் நேற்று இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் தல 59 ரிலீஸ் தள்ளி போவதாக தகவல் வெளியானது. அது உண்மையா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு யுவன் ஷங்கர் திட்டமிட்ட மே 1-ம் தேதி தல 59 ரிலீசாகும். ரிலீஸ் தேதியை மாற்றும் எண்ணம் இல்லை கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதே மே 1-ல் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து வரும் Mr. லோக்கல் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.