
Thala 59 Movie :
தல அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் உறுதியாகியுள்ளது, இது தல ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவரின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது விஸ்வாசம் ரிலீஸையும் அடுத்த படத்தின் அப்டேட்டையும் தான்.
அஜித்தின் அடுத்த படத்தை வினோத் தான் இயக்க உள்ளார், போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்ற தகவல்கள் உறுதியாகி இருந்த நிலையில் இந்த படம் பிங்க் படத்தின் ரிமேக் தான் என உறுதி செய்துள்ளார் இப்படத்தின் ஹிந்தி இயக்குனர்.
கோவாவில் நடந்த விருது விழாவில் இது குறித்து பேசிய பிங்க் படத்தின் இயக்குனர். போனி கபூர் அடுத்ததாக தல அஜித்தை வைத்து தமிழில் பிங்க் படத்தின் ரீமேக்கை தயாரிக்க உள்ளார்.
எச். வினோத் இயக்க உள்ள இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.
அஜித்தின் அடுத்த படம் வினோத்துடன் என்பது உறுதியாகியுள்ளது ரசிகர்களை கொண்டாட வைத்தாலும் பிங்க் படத்தின் ரி-மேக் என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
சமூக வளையதளங்களில் தல ரசிகர்கள் புது ஸ்க்ரிப்டா பண்ணுங்க, அஜித்தை மாஸாக காட்டுங்க என தொடர்ந்து வினோத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.