Web Ads

பொங்கலை முன்னிட்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படம் வெளியீடு..

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் சிறுபட்ஜெட் படம் பற்றிப் பார்ப்போம்..

மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’. ‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.

‘இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வரும் தடைகளைக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதைக் கலகலப்பாக சொல்லும் படம்.

படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது என்கிறது படக்குழு. இதன் இரண்டாவது தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி, சூர்யாவின் கருப்பு படங்களைத் தொடர்ந்து இந்தப் படமும் வெளியாகிறது.

tamizh paiyan hindi ponnu to release for pongal festival
tamizh paiyan hindi ponnu to release for pongal festival