தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை  மைய இயக்குநர் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது,

நேற்று அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு ‘ லூபன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்த புயல் ஓமன் நாட்டை அடையும்.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உண்டாகியுள்ளது. புயல் மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.

வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், நாகபட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய துறைமுகங்களில் 1- ஆம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.