Tamilisai

Tamilisai : விஜயை எதிர்த்தும் அஜித்தை பாராட்டியும் பா.ஜ. க ஆதாயம் தேட முயற்சிப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்திய மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசை சேர்ந்த தமிழிசை, எச். ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து விஜயை தாக்கி பேசி வருகின்றனர்.

வசூலில் விஸ்வாசம் படைத்த சாதனை – அதிர வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு .!

விஜயை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இவர்கள் மெர்சல் படத்திற்கு செய்த பிரீ ப்ரோமோஷன்கள் உலகத்திற்கே தெரிந்த ஒன்று.

இந்நிலையில் தற்போது பா.ஜ. க அஜித் ரசிகர்களுக்கு வலை வீசத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் திருப்பூர் அஜித் ரசிகர்கள் சிலர் பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை திரையுலகிலேயே அஜித் தான் நேர்மையானவர்.

தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய விரும்புவர். அவரை போலவே அஜித் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் பா.ஜ.க அஜித் ரசிகர்களுக்கு வலை வீசுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மேலும் தமிழிசையின் இந்த பேச்சு குறித்து அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் நீங்க என்ன தான் சொன்னாலும் தமிழகத்தில் தாமரை மலராது. அதில் நாங்க ஒற்றுமையாக இருப்போம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.