நடிகை ரம்பா தனது கணவரை விவாகரத்து செய்தாரா?: உண்மை நிலவரம் என்ன?
வழிப்போக்கனுக்கு வாய்ச்செலவு, சுமப்பவனுக்குத்தானே வலியும் வாழும் வாழ்க்கையும். ஆகவே, யாராயினும் ஒருவரது இல்லற வாழ்க்கையை கணித்து ஏதேதோ பரவ விடுவதும் குற்றம்தான். அதாவது நடந்தது என்னவென்றால்..
நடிகை ரம்பா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பற்பல கருத்து சார்ந்த விவாதங்கள் பேசப்பட்டன. இந்நிலையில், உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்து தற்போது ரம்பாவின் இதழ்மொழியிலேயே அறிவோம் வாங்க..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, குறுகிய காலத்திலேயே உயர்ந்தவர் ரம்பா.
பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து, பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே, 2010-ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன், மிகப்பெரிய தொழிலதிபராவார்.
திருமணத்துக்குபிறகு தம்பதி இருவரும் துபாயில் செட்டில் ஆனார்கள். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகிய நிலையில், சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு வெடித்தது. ரம்பாவை அவரது கணவர் விவாகரத்து பெற உள்ளதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் ரம்பா. அதில், 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையைத் தற்போது புரிந்துகொண்டு விட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று தன்னுடைய மனுவில் ரம்பா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இறுதியில், நீதிமன்றம் இதில் தலையிட்டு அறிவுறுத்தியதையடுத்து, தம்பதியிடையே உள்ள பிரச்னையை சமரச மையத்தில் பேசி தீர்த்து வைக்கப்பட்டது. மனைவி ரம்பாவுடன் சேர்ந்து வாழ இருப்பதாக கணவர் இந்திரன் பத்மநாதன் சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
அதற்கு பிறகு, இருவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குடும்ப போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தம்பதி விவாகரத்து பெறப்போவதாக மறுபடியும் செய்திகள் கசிய துவங்கின. ரம்பா மற்றும் அவருடைய கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வலம்வந்தன.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் தம்பதிகள் விவாகரத்து பெருகிவரும் நிலையில், ரம்பாவின் விவாகரத்து செய்தியும் தீயாய் பரவியது. ஆனால், உடனடியாக இதுகுறித்து ரம்பா பதிலளித்துள்ளார். அதில்,
‘நானும் என் கணவரும் விவாகரத்து பெற இருப்பதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது. கணவன் மனைவி என்றால் சண்டை இருப்பது சாதாரண ஒரு விஷயம் தான். அதை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. நாங்கள் எங்கள் குழந்தை வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.
நிரந்தமான அழகு முகத்திலா இருக்கிறது? அகத்திலே அல்லவா இருக்கிறது. அது, ரம்பாவின் வார்த்தையில் தெரிகின்றது தானே.!