சூர்யாவுடன் பல நடிகர்கள் இணைந்து எடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Actors Group Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுடன் பல நடிகர்கள் இணைந்து எடுத்த குரூப் ஃபோட்டோ.. இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கூட்டத்தில் ஒருவன் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கி வரும் படத்தில் நீளமான கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவுடன் விஷால் ஆர்யா கார்த்தி விஷ்ணு விஷால் ஜீவா ஜித்தன் ரமேஷ் ஷாம் அப்பாஸ் சாந்தனு பரத் பல திரையுலக பிரபலங்கள் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளிவராத அரிய புகைப்படம் என்பதால் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.