விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கு பதிலாக நடிக்க போவது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. எச் வினோத் இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாயகியாக நடிக்க இருந்த திரிஷா ஷூட்டிங் தொடங்க தாமதமாகி கொண்டே இருப்பதால் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நடிகை தமன்னா ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வீரம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.