
காவாலா பாடல் கொடுத்த ரீச்சால் மீண்டும் உனது நடிகருக்கு ஜோடியாக உள்ளார் தமன்னா.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அஜித் விஜய் சூர்யா சிம்பு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து வெளியான தமன்னாவின் காவாலா பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்படியான நிலையில் இந்த பாடல் கொடுத்த ரீச் காரணமாக மீண்டும் முன்னணி நடிகரான அஜித்துக்கு ஜோடியாக நடித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இவர் அஜித்துடன் இணைந்து வீரம் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக இருந்த நிலையில் ஷூட்டிங் தொடங்க காலதாமதம் ஆகுவதன் காரணமாக அவர் விலகிக் கொண்டார் என தகவல்கள் பரவியது.
இப்படியான நிலையில் இந்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
