திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடி தமன்னா நடித்த ‘ஒடேலா-2’ பட டீசர் ரிலீஸ்
தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா-2’ திரைப்பட டீசர் வெளியீடு பற்றிப் பார்ப்போம்..
தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஒடேலா’ கிரைம் திரில்லர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தனர். பெரும்பாலும் வாரணாசியில் படமாக்கப்பட்டது.
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் உள்ளன. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் பெற்று, டூப் போடாமலேயே நடித்திருக்கிறார் தமன்னா. தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது படக்குழு.
மது தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். செளந்தர் ராஜன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடியே ஒடேலா 2 படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். திகிலூட்டும் காட்சிகளுடன் கூடிய இப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
