தவறான வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தமன்னாவின் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஏராளமான டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த இவர் தற்போது பாலிவுட் திரை உலகில் பிஸியாக இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் தமன்னா அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா பாடலில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் நடிகை தமன்னாவின் கையில் மிகப்பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அது உலகின் 5-வது பெரிய வைரம் என்றும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து வியந்த நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா இதனை தமன்னாவிற்கு பரிசாகக் கொடுத்தார் என்றும் இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்றும் செய்திகள் தீயாக பரவி வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து மறுப்பு தெரிவித்து தமன்னா பகிர்ந்திருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி இந்த செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியான தமன்னா “இது வெறும் ‘பாட்டில் ஓபனர்’தான், வைரம் இல்லை” என்று தெளிவுப்படுத்தி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தற்போது இந்த தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.