நடிகை தமன்னா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tamanna latest photoshoot viral:

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது பாலிவுட் திரை உலகில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கும் தமன்னா அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா பாடல் மூலம் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருகிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் தமன்னா தற்போது ரீசண்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் லைக் செய்து ட்ரெண்டிங்காகி வருகிறது.