Surya Next Movie :
விஜய் நடிக்க இருந்த சரித்திர படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
அதே போல் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தளபதி விஜய்க்காக வரலாற்று கதை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார்.
வரலாற்று கதை என்பதால் விஜய் நடிக்க தயங்கி வந்ததால் தற்போது இந்த கதையில் நடிக்க சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் கதை பிடித்து போக சூர்யா நடிக்க ஒப்பு கொண்டு விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மணிரத்தினம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று கதையில் நடிக்க விஜயிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.