சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார் முன்னணி நடிகர் ஒருவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
சூர்யாவின் பிறந்த நாளில் வெளியான கிளிம்ஸ் வீடியோ மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்து சுதா கொங்கார இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது திரைப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.