
துல்கர் சல்மான் மற்றும் தமன்னாவின் காதலன் விஜய் வர்மா ஆகியோருடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று.

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்காரா மற்றும் சூர்யா கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக நீண்ட நாளாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்காலிகமாக சூரியா 43 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க நஸ்ரியா நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகரான விஜய் வர்மா ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படம் உருவாக இருப்பதும் உறுதியாகியுள்ளது. இதோ அறிவிப்பு