Suriya Statement on Jyothika Speech
Suriya Statement on Jyothika Speech

ஜோதிகா பேசுவது தவறு என்றால் நம்முடைய மூத்தோர்கள் பேசியதின் அர்த்தம் என்ன என்ன சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Suriya Statement on Jyothika Speech : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஜோதிகா ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இதற்கான விருது விழாவில் அவர் கலந்து கொண்டபோது தஞ்சை பெரிய கோவிலை பராமரிப்பது போல பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் பராமரியுங்கள். உண்டியலில் செலுத்தும் காசை இதற்காகவும் செலவிடுங்கள் என கூறினார்.

இந்த விருது விழா நடந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் அந்த நிகழ்ச்சி மீண்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பிய போது ஜோதிகாவின் பேச்சு விவாதத்துக்கு உள்ளானது.

வைரமுத்து பட்ட அவமானம் உங்களுக்கு தெரியுமா? சின்மயிக்கு பதிலளித்த கபிலன் வைரமுத்து.!

நாளுக்கு நாள் இது குறித்த விவாதம் பரபரப்பாகி கொண்டே இருக்கும் நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா.

அந்த அறிக்கையில் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவது இல்லை என்ற கூற்று ஊடகங்களுக்கு மிகச் சரியாக பொருந்தும்.

ஜோதிகா எப்பயோ பேசியதை இப்போது விவாதத்துக்கு உள்ளாக்கி கொண்டிருக்கிறார்கள். கோவில்களை பராமரிப்பது போல பள்ளிகளுக்கு மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யுங்கள் என ஜோதிகா கூறினார்.

ஆனால் இதனை ஒரு குற்றமாக சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டு வருகிறார்கள். ஜோதிகா கூறியது தவறு என்றால் நம்முடைய மூத்தோர்கள், விவேகானந்தர் திருமூலர் போன்றவர்கள் கூறியதற்கு என்ன அர்த்தம் என அவர் கேள்வி எழுப்பினார்.

என்னதான் விவாதங்கள் ஏற்பட்டாலும் எங்களது கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்களது பிள்ளைகளுக்கும் மதத்தை விட மனித நேயமே முக்கியம் என்பதை சொல்லிக் கொடுக்கிறோம்.

தரக்குறைவான விமர்சனங்கள் வரும்போது நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள், முகம் தெரியாத பலர் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எங்களின் சார்பாக பேசுகிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Suriya Statement on Jyothika Speech
Suriya Statement on Jyothika Speech