அகரம் பவுண்டேஷனின் விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படத்தில் தனது 42வது திரைப்படத்தை நடித்து வருகிறார். வரலாற்று கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் மாணவர்களின் கல்விக்காக நடத்தப்பட்டு வரும் அகரம் பவுண்டேஷனின் 44 வது ஆண்டு விருது நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற சூர்யாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.