சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் சூர்யா ராசி இல்லாத நடிகையுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக இவர் நடித்து வரும் படங்கள் தோல்வியை தழுவி வருவதால் ராசி இல்லாது நடிகை என பெயரெடுத்துள்ளார் பூஜா. இப்படியான நிலையில் இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை கொஞ்சம் ஷாக்காக்கி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.