suriya Missed Baahubali Movie
suriya Missed Baahubali Movie

ரூபாய் இரண்டாயிரம் கோடி வசூல் வேட்டை யாடிய படத்தை சூர்யா தவற விட்டிருப்பது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

suriya Missed Baahubali Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் மிஸ் செய்து சூப்பர் ஹிட் அடித்த படங்கள்..!(Opens in a new browser tab)

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்களுக்காக சூர்யா ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களை அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது உலகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் கோடி வசூல் வேட்டையாடிய பாகுபலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவைத் தேடி வந்துள்ளது.

சூர்யாவிற்கு தெலுங்கு வில் இன்றுவரை சிறப்பான மார்க்கெட் இருப்பதால் ராஜமவுலி இவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அப்போதே கால்ஷீட் பிரச்சனையால் சூர்யா பட வாய்ப்பை தவற விட்டுள்ளார்.

ஒருவேளை சூர்யா மட்டுமே படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் அவரது திரைப் பயணத்தில் வேற லெவல் படமாக இருந்திருக்கும். மேலும் சூர்யாவின் மார்க்கெட் இன்னும் பல மடங்கு உச்சம் பெற்றிருக்கும்.

பாகுபலி படத்தை சூர்யா தவற விட்டதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.