Suriya and Bala :
Suriya and Bala :

Suriya and Bala : தனது ஆஸ்தான நடிகர் கேட்டுக்கொண்டதற்காக ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தார் பாலா. ஆனால் அதுவே அவருக்கு கடைசியில் பிரச்சனையாக வந்து முடிந்தது. ஒருவழியாக அந்த சர்ச்சையில் இருந்து பாலா தற்போது மீண்டு வந்துவிட்டார்.

இதைதொடர்ந்து ஒரு மிரட்டலான படத்துடன் களமிறங்க வேண்டும் என திட்டமிட்ட பாலா, அதற்காக சூர்யாவுடன் பேசியிருக்கிறாராம். பாலா சொன்ன கதை பிடித்துபோகவே சூர்யாவும் அதில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

மேலும் பரதேசி, நாச்சியார் படங்களில் பாலாவுடன் பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் இப்படம் எப்போது துவங்கும் என தெரியவில்லை.

படத்துக்கு படம் சர்ச்சையில் சிக்கும் பாலாவுடன் சூர்யா மீண்டும் இணைந்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் தனக்கு பிரேக் கொடுத்த இயக்குனர் தற்போது சங்கடத்தில் இருப்பதால் அவருக்கு உதவும் விதமாக சூர்யா இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.

Suriya and Bala :
Suriya and Bala :