Suriya 40 Update : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Suriya, Bala, Kaappaan , Cinema
மன உளைச்சலில் இருந்து வந்த பாலாவுக்கு சூர்யா கால்ஷீட் கொடுத்து கை கொடுத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya 40 Update : தமிழ் சினிமாவில் தனித்துவமான திறமை கொண்ட இயக்குனர் பாலா. விக்ரம், சூர்யா போன்ற பல நடிகர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது இவர் இயக்கிய படம் தான் என்றால் மிகையாகாது.

ஆனால் இறுதியாக பாலா இயக்கிய தாரைதப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் சரியாக ஓடவில்லை. விக்ரமின் மகன் த்ருவ்வை வைத்து இயக்கிய வர்மா படமும் குப்பைக்கு போனது அவரை மன உளைச்சலுக்கு தள்ளி விட்டது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இந்நிலையில் தற்போது சூர்யா பாலாவிற்கு கால்ஷீட் கொடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு பாலா இயக்கத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.