Suresh Chakravarty About Nisha in BB4

பிக் பாஸ் நிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவிட்டுள்ளார் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி.

Suresh Chakravarty About Nisha in BB4 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. ரேகா மற்றும் வேல்முருகனை தொடர்ந்து இவர் மூன்றாவது நபராக பிக்பஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி தொடர்ந்து நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா குறித்த மீம்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நிஷா குறித்து ஒரே வார்த்தையில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது நிஷா என்றால் விஷம் என கூறியுள்ளார்.

அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த பதிவு