Sura Movie Box Office Collection Report
Sura Movie Box Office Collection Report

சுறா திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிய நிலையில் இது குறித்த ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. விஜய்க்கு எதிர்பாராத தோல்வியை கொடுத்த இந்த படத்தின் வசூல் என்ன என்பதை பார்ப்போம் வாங்க.

Sura Movie Box Office Collection Report : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தான் தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் இருந்து வருகிறார்.

உலகம் முழுவதும் முழுவதும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகி விட்டதால் சுமாரான கதை கொண்ட படமாக இருந்தாலும் அது பாக்ஸ் ஆபிஸில் பயங்கர ஹிட் அடித்து விடுகிறது.

அருவா படத்திற்காக கெட்டப்பை மாற்றிய சூர்யா – செம மாஸாக வைரலாகும் புகைப்படம்

ஆனால் 2010 இல் இவரது நடிப்பில் வெளியான சுறா திரைப்படம் உச்ச கட்ட கேலி கிண்டலுக்கு உள்ளாகி எதிர்பாராத அளவிற்கு தோல்வியை சந்தித்தது. இப்படம் வெளியாகி இன்றோடு பத்து வருடங்கள் ஆகிறது.

இந்தப் படம் ரூபாய் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. உலகம் முழுவதும் சேர்த்து 10 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஏழு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

விஜய்யின் கடந்த பத்து வருட திரைப்பயணத்தில் மிக மிக குறைந்த வசூல் பெற்ற திரைப்படமாக சுறா தான் இருந்து வருவதாகவும் என கூறப்படுகிறது. வசூல் குறைவாகவே இருந்தாலும் இப்படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்பட்டுவிடும் என்ற ராஜ்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.