சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டுள்ளார் அஜித் குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் நாயகியாக திரிஷா, தமன்னா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

அஜித் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனாலும் அவர் சில ஹிட் படங்களையும் தவற விட்டுள்ளார். அப்படி அஜித் தவற விட்ட படங்களில் ஒன்று தான் ரன்.

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து வெளிவந்து வெற்றி கண்ட இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான்‌. தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை அஜித் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.